- °C

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகள் பதக்கம் வென்றது பெருமையாக உள்ளது, என கலப்பு தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற தென்காசி வீராங்கனை அபிநயா ராஜராஜனின் தந்தை கூறினார்.

ஜப்பானில் நடக்கும் ஆசிய விளையாட்டில் 4×100 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வெண்கலம் வென்றது. இதில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்லுாத்தைச் சேர்ந்த அபிநயா 19, இடம்பெற்றிருந்தார்.

ராஜராஜன்–சங்கரி தம்பதியின் மூத்த மகளான அபிநயா, ஆறாம் வகுப்பில் 100 மீட்டர் ஓட்டத்தில் வட்டார அளவில் வெற்றி பெற்று தனது விளையாட்டு பயணத்தை துவக்கினார். தொடர்ந்து பயிற்சி பெற்று மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் சாதித்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் 13 நாடுகளில் நடந்த சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 10க்கும் மேற்பட்ட சர்வதேச பதக்கங்களையும், 30க்கும் மேற்பட்ட தேசிய பதக்கங்களையும் வென்றார்.

இதுகுறித்து அவரது தந்தை ராஜராஜன் கூறுகையில், ''ஆசிய விளையாட்டில் மகள் பதக்கம் வென்றது பெருமையாக உள்ளது. 2028 ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் பங்கேற்று பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை இளம் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும். இதற்காக முதல்வருக்கு நன்றி. கிராமப்புறங்களில் உள்ள திறமையான வீரர்களை பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும்,'' என்றார்.

BackCopyrights © 2026 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.