- °C

Business
All Categories

Are You a business owner?

List Your Business / AD

வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் விலகிய இலங்கை முன்னணி வீரர் - காரணம

Grow your business by getting relevant and verified leads
வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் விலகிய இலங்கை முன்னணி வீரர் - காரணம

வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் விலகிய இலங்கை முன்னணி வீரர் - காரணம

  Apr 02, 2024     Sports

வங்காளதேசம், இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்து வருகிறது.

சட்டோகிராம்,

வங்காளதேசம், இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது .முதல் இன்னிங்சில் இலங்கை 531 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் குசால் மெண்டிஸ் 93 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 92 ரன்னும், கருணரத்னே 86 ரன்னும், தனஞ்செய டி சில்வா 70 ரன்னும், சண்டிமால் 59 ரன்னும், நிஷான் மதுஷ்கா 57 ரன்னும் எடுத்தனர். வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும், ஹசன் மெஹ்மூத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
 

இதையடுத்து, முதல் இன்னிங்சை விளையாடிய வங்காளதேச அணி இலங்கையின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக சகீர் ஹசன் 54 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 353 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து 455  ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. மேத்யூஸ் 39 ரன்களுடனும், பிரபாத் ஜெயசூர்யா 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இலங்கை அணி தனது 2வது இன்னிங்சில் 40 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இலங்கை அணி 510 ரன்கள் முன்னிலை பெற்றது. இலங்கை அணி தரப்பில் மேத்யூஸ் 56 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 511 ரன்கள் த்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது. வங்காளதேச அணி தற்போது வரை 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில், இலங்கை அணியின் முன்னணி பேட்ஸ்மேனான தினேஷ் சண்டிமால் வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் இருந்து குடும்ப மமருத்துவ அவசர நிலை காரணமாக வெளியேறி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் சண்டிமால் முதல் இன்னிங்சில் 59 ரன்னும், 2வது இன்னிங்சில் 9 ரன்னும் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

icon
Tenkasi Ads

Looking for the Best Service Provider? Get the App!

  • Find nearby listings
  • Easy service enquiry
  • Listing reviews and ratings
  • Manage your listing, enquiry and reviews
We'll send you a link, open it on your phone to download the app
Tenkasi Ads

Copyrights © 2024 Quickix.com.   All rights reserved. Powered by Redback

Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Quickix advertising Private Limited. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.